Logo
You must Login or Sign-up to participate

tamilan tamilan's Blog

Posted over 2 years

புலிகளுடனான வெற்றியை அரசியல்படுத்த அரசாங்கம் முயற்சி: ஆசிய மனித உரிமைகள் பேரவை

இது தொடர்பில் அண்மையில் பேரவையினால் விடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருப்பது புலனாகிறது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெற்றுக் கொண்ட வெற்றியை அரசியல் மயப்படுத்தி, வெற்றிபெறும் நோக்கிலேயே இந்த தேர்தல்களை நடத்துவதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கம் உதவி உறுதியளிப்புகளை தவறவிடும் அணுகுமுறையையே பின்பற்றி வந்துள்ளதாக பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதாக அரசாங்கம் தெரிவித்த போதும், இந்த தேர்தலிலும் அதனை நீக்காது மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகம் கொடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த முறை ஜனாதிபதி தேர்தலை, கடந்த காலங்களை விட அதிக அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையுடன் எதிர்நோக்குவதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்ற போதும், அதிகாரங்களின் ஒருங்கிணைப்பு குறித்து யாரும் கூறவில்லை.

நிறைவேற்று அதிகார முறைமைக்கு பதிலாக முன்வைக்கப்பட வேண்டி அதிகார முறைமைகள் குறித்து விபரமளிக்க எதிர்கட்சிகள் தோல்வி கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்க்கட்சிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு பதிலாக, நிறைவேற்று பிரதமர் முறைமையை முன்வைக்கலாம் என தெரிவித்து வருகிறது.

எனினும் இந்த முறைமை வெறும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட முறைமையாகவே காணப்படும் என தெரிவித்த மனித உரிமைகள் பேரவை, தற்போது நிறைவேற்று ஜனாதிபதி என அழைக்கப்படுவது, பின்னர் நிறைவேற்று பிரதமர் என அழைக்கப்படும் மாற்றம் மட்டுமே உருவாகும் என தெரிவித்துள்ளது.

இது குறித்து சகலருக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என ஆசிய மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை சட்ட மீறல்கள் நிறைந்த தேர்தல் முறைமை தொடர்பிலும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறுகின்ற சட்ட மீறல்கள் களையப்பட்டு, நீதி அமுலாக்கம் உறுதிப்படுத்தப்படுவது அவசியம் எனவும் ஆசிய மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

1 video:
Vijay & Jothika in Azhakovil - Thirumalai
Comments (0) |
Footer
LovdbyLess is a Free Open Source Social Network Platform by Less Everything
Download Free | Demo Lovd | Technical Notes | Contact Us | Blog